Sunday, July 30, 2017

ஐ.ஐ.டி.,யின் இலவச படிப்புகள்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்.,(ஐ.ஐ.எஸ்சி.,)ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும், சான்றிதழ் படிப்பினை அனைவரும் படிக்கும் வகையில், இணையதளம் மூலம் இலவச கல்வி சேவையை வழங்கப்படுகிறது!

நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, பொறியியல், மானுடவியல், வேளாண்மை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில், தங்களது நுட்ப திறன்களை மெருகேற்றிக் கொள்ள விரும்புபவர்களும்,நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னலாஜி என்கேன்ஸ்ட் லேர்னிங்-ல் (என்.பி.டி.எல்.,) பதிவு செய்து, இலவசமாக கல்வி கற்றுக் கொள்ளலாம்.
காணொளி வகுப்புகள்சென்னை, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர் மற்றும் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி.,யிலும், பணிபுரியும் அனுபவமிக்க பேராசிரியர்களின் விரிவுரை வகுப்புகளை, என்.பி.டி.எல்., இணையதளத்தில் காணொளி மற்றும் யூ டியூப் வழியே பங்கேற்று படிக்கலாம்.
மேலும், தேவைகளுக்கு ஏற்ப, காணொளிகளை இலவசமாகவும் மற்றும் புத்தகங்களை கட்டணம் செலுத்தியும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உண்டு. குறிப்பிட்ட பாடப்பகுதியில் சான்றிதழ் பெற விரும்புவர்கள் குறைந்த தேர்வு கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
பாடப்பிரிவுகள்
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பயோலஜிக்கல் சயின்ஸ் அண்ட் பயோடெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்டரி அண்ட் பயோ கெமிஸ்டரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலட்ரிக்கல் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட், ஹுமானிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ் போன்ற பல்வேறு துறை பிரிவுகளில், சுமார்  994-க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகள்  மற்றும் 19 ஆயிரத்து 428க்கும் அதிகமான காணொளி தொகுப்புகள் உள்ளன.
புதிய 154 படிப்புகள்ஜூலை மாதம் தொடக்கம் முதல், இயற்பியல், வேதியியல், கணிதம் உட்பட 13 துறை பிரிவுகளில், ஏர் கிராப்ட் டிசைன், ஏர் கிராப்ட ஸ்டெபிலிட்டி அண்ட் கன்ட்ரோல், செல் கல்சுரல் டெக்னாலஜி, இன்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி, அனலிட்டிக்கல் கெமிஸ்டரி, கெமிக்கல் அண்ட் பயோலஜிக்கல், புராஜெக்ட் பிளானிங் அண்ட் கன்ட்ரோல், டிசைன் அண்ட் ஸ்டீல் ஸ்டக்சரல், கிளவுட் கம்ப்யூட்டிங், புரோக்கிராமிங் இன் சி++, சாப்ட்வேர் டெஸ்டிங், சோசியல் நெட்வோர்க்கிங், கன்ட்ரோல் இன்ஜினியரிங், சாப்ட் ஸ்கில், இ-பிசினஸ், சிக்- சிக்மா உட்பட 154 வகையான பல்வேறு பாடப்பகுதிகளில் சான்றிதழ் படிப்புகள், நவம்பர் மாதம் வரை கற்றுத்தரப்பட உள்ளன.
இப்பாடப் பகுதிகளில் சிறப்பு சான்றிதழ் பெற, விரும்புபவர்களுக்கான தேர்வு பதிவு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும். என்.பி.டி.எல்., ஆன்லைன் படிப்பில் பங்கேற்கும் அனைவரும் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் தேர்வுகளை எழுதி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
விபரங்களுக்கு: www.nptel.ac.in

No comments:

Post a Comment